Saturday, 18 February 2012

சாலையில் திரியும் மனநோயாளிகள்


சாலையில் திரியும் மனநோயாளிகள்

-நமது நிருபர்-First Published : 15 Feb 2012 04:11:27 PM IST

சிதம்பரம், பிப்.14: கோயில் நகரமும், சுற்றுலா நகரமான சிதம்பரம் நகரில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் செயல்களால் சிதம்பரம் நகர மக்கள் வேதனைக்குள்ளாகி வருகிறார்கள்.
÷சிதம்பரம் நகரில் சமீபகாலமாக மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் இரவும், பகலும் சுகாதார சீர்கேட்டுடன் சுற்றித்திரிந்து வருகின்றனர். இவர்களது செயல்கள் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பையும், வேதனையையும் ஏற்படுத்தி வருகிறது.
÷அண்மையில் பள்ளிப்படையைச் சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட சுமார் 20 வயது இளைஞர் மேலர வீதியில் பைக்கில் வந்த பொறியியல் புல மாணவி ஒருவரை கீழே தள்ளி கலாட்டா செய்துள்ளார். இதனால் அந்த மாணவி காயமும், அதிர்ச்சியுமுற்றார். அருகில் இருந்தவர்கள் அந்த இளைஞரை பிடித்து நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால் சிறிது நேரம் கழித்து அந்த இளைஞரை காவல் துறையினர் அனுப்பி விட்டனர்.
÷அதுபோன்று உடம்பில் அரைகுறை துணியுடன் சுமார் 22 வயதுள்ள இளம்பெண் இரவில் சுற்றித் திரிந்து வருகிறார். இதனால் அந்த மனநிலை பாதித்த பெண்ணுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மனநிலை பாதித்தவர்கள் சிலர், இரவு நேரத்தில் வீட்டு வாசலில் இயற்கை உபாதைகளை கழித்து விட்டு சென்று விடுகின்றனர்.
÷மேலும், சாலையில் செல்பவர்களை தகாத வார்த்தையால் திட்டுவது, உடல் அங்கத்தை காட்டுவது போன்ற முகம் சுளிக்கும் செயலில் ஈடுபடுவதால் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலையில் கிடக்கும் துண்டு சிகரெட் மற்றும் பீடிகளை எடுத்து புகைப்பது, அதிகாலையில் நடைப் பயிற்சி மேற்கொள்வோர் மீது கல்வீசுவது உள்ளிட்ட பல்வேறு செயல்களில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் ஈடுபடுவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
÷எனவே நகராட்சி நிர்வாகமும், காவல் துறை நிர்வாகமும் இணைந்து மனநிலை பாதிக்கப்பட்டவர்களை பிடித்து, மனநல காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment