Saturday 3 April, 2010

தமிழ் நெஞ்சங்கள்

இது என்னுடைய புதிய வலைப் பகுதி உங்கள் அனைவரையும் நான் வரவேற்க் கி றேன்

7 comments:

  1. بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ


    அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

    ReplyDelete
  2. சாலையில் திரியும் மனநோயாளிகள்

    -நமது நிருபர்-First Published : 15 Feb 2012 04:11:27 PM IST

    சிதம்பரம், பிப்.14: கோயில் நகரமும், சுற்றுலா நகரமான சிதம்பரம் நகரில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் செயல்களால் சிதம்பரம் நகர மக்கள் வேதனைக்குள்ளாகி வருகிறார்கள்.
    ÷சிதம்பரம் நகரில் சமீபகாலமாக மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் இரவும், பகலும் சுகாதார சீர்கேட்டுடன் சுற்றித்திரிந்து வருகின்றனர். இவர்களது செயல்கள் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பையும், வேதனையையும் ஏற்படுத்தி வருகிறது.
    ÷அண்மையில் பள்ளிப்படையைச் சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட சுமார் 20 வயது இளைஞர் மேலர வீதியில் பைக்கில் வந்த பொறியியல் புல மாணவி ஒருவரை கீழே தள்ளி கலாட்டா செய்துள்ளார். இதனால் அந்த மாணவி காயமும், அதிர்ச்சியுமுற்றார். அருகில் இருந்தவர்கள் அந்த இளைஞரை பிடித்து நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால் சிறிது நேரம் கழித்து அந்த இளைஞரை காவல் துறையினர் அனுப்பி விட்டனர்.
    ÷அதுபோன்று உடம்பில் அரைகுறை துணியுடன் சுமார் 22 வயதுள்ள இளம்பெண் இரவில் சுற்றித் திரிந்து வருகிறார். இதனால் அந்த மனநிலை பாதித்த பெண்ணுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மனநிலை பாதித்தவர்கள் சிலர், இரவு நேரத்தில் வீட்டு வாசலில் இயற்கை உபாதைகளை கழித்து விட்டு சென்று விடுகின்றனர்.
    ÷மேலும், சாலையில் செல்பவர்களை தகாத வார்த்தையால் திட்டுவது, உடல் அங்கத்தை காட்டுவது போன்ற முகம் சுளிக்கும் செயலில் ஈடுபடுவதால் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலையில் கிடக்கும் துண்டு சிகரெட் மற்றும் பீடிகளை எடுத்து புகைப்பது, அதிகாலையில் நடைப் பயிற்சி மேற்கொள்வோர் மீது கல்வீசுவது உள்ளிட்ட பல்வேறு செயல்களில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் ஈடுபடுவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    ÷எனவே நகராட்சி நிர்வாகமும், காவல் துறை நிர்வாகமும் இணைந்து மனநிலை பாதிக்கப்பட்டவர்களை பிடித்து, மனநல காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    thanks to thinamalar

    ReplyDelete
  3. நாளைய மின்தடை: காட்டுமன்னார்கோயில்

    First Published : 14 Feb 2012 05:34:10 PM IST

    நாள், நேரம்: புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5.30 வரை.
    பகுதிகள்: காட்டுமன்னார்கோயில், லால்பேட்டை, பழஞ்சநல்லூர், குருங்குடி, கண்டமங்கலம், வீரானந்தபுரம், நாட்டார்மங்கலம், மோவூர், ஆயங்குடி, கஞ்சங்கொல்லை, முட்டம், டி.புத்தூர், டி.நெடுஞ்சேரி, விளாகம், விருத்தாங்கநல்லூர், கந்தகுமாரன், ஆட்கொண்டநத்தம், சிவக்கம், பரிவாளகம், மதுராந்தகநல்லூர், குமராட்சி, பருத்திகுடி, ம.அரசூர், சி.அரசூர், வெள்ளூர், வெண்ணையூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
    thanks to thinamalar

    ReplyDelete
  4. 19-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்

    First Published : 14 Feb 2012 05:30:03 PM IST

    கடலூர், பிப். 13: கடலூர் மாவட்டத்தில் வரும் 19-ம் தேதியும், ஏப்ரல் 1-ம் தேதியும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்படுகின்றன.
    ஆட்சியர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    கடலூர் மாவட்டத்தில் வரும் 19 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய நாள்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. போலியோ நோயை முற்றிலும் ஒழிப்பதற்காக மேற்கண்ட நாள்களில், கடலூர் மாவட்டத்தில் 1,613 சிறப்பு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
    மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு, தனியார் மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில், போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்படும். இந்த முகாம்களில் சுமார் 6,452 களப் பணியாளாளர்கள் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் பணியில் ஈடுபட உள்ளனர். 5 வயதுக்கு உள்பட்ட 2,46,732 குழந்தைகளுக்கு இம்முகாம்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து புகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
    பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்கு உள்பட்ட குழந்தைகள் அனைவருக்கும், மேற்கண்ட நாட்களில், ஏற்கனவே போலியோ சொட்டுமருந்து கொடுத்திருந்தாலும், தவறாமல் மீண்டும், சொட்டு மருந்து அளிக்க வேண்டும். எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மேற்கண்ட நாட்களில் முகாமிற்கு அழைத்து வந்து, சொட்டு மருந்து புகட்ட வேண்டும்.
    மேலும் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், இந்த நாட்களில் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள, 5 வயதிற்கு உள்பட்ட குழந்தைகளின் பெற்றோரிடம், போலியோ சொட்டு மருந்தின் அவசியம் குறித்து எடுத்துக்கூறி, அவர்கள் இந்த முகாமைப் பயன்படுத்திக் கொள்ள உதவ வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

    ReplyDelete
  5. கடலூர் மாவட்ட த.மு.மு.க வின் ஆம்புலன்ஸ் சேவை தொடர்புக்கு

    நெல்லிக்குப்பம் – 9791637908

    நெய்வேலி – 9443430653

    லால்பேட்டை – 9894414273, 9944225053

    மங்கலம்பேட்டை – 9047544150

    ReplyDelete
  6. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளின் நுரையீரல் பலமாக இருக்கும்
    BY DAWAH WORLD – FEBRUARY 15, 2012 - الأربعاء 24 ربيع الأول 1433
    POSTED IN: HEALTH
    தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளின் உடல்நலம் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளின் நுரையீரல் மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்கும் என தெரிய வந்தது. இதனால் அந்த குழந்தைகளுக்கு ஆஸ்துமா போன்ற நுரையீரல் நோய் வராது.
    ஆஸ்துமா நோய் பாதித்த பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கக்கூடாது. அதன் மூலம் குழந்தைக்கும் அந்த நோய் பரவும் என்று முந்தைய ஆய்வில் கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய ஆய்வின்படி ஆஸ்துமா நோய் தாக்கி இருந்தாலும் பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கலாம். அதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோயின் தாக்கம் குறையும் என்றும் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்

    ReplyDelete
  7. ஹோண்டுரா, பிப், 15:-

    மத்திய அமெரிக்காவின் ஹோண்டுரா நாட்டில் உள்ள சிறையில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இத்தீவிபத்தில் சிக்கி 100-க்கும் மேற்பட்ட சிறை கைதிகள் பலியாகியிருப்பதாக அங்கிருந்து வரும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தீயை அணைக்க விரைந்த தீயணைப்பு படையினர் பல மணி நேரங்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் கடும் புகைமூட்டத்தால் மூச்சு திணறியும், தீயில் கருகியும் இறந்துள்ளதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

    சிலபேர் சிறையின் கூரை மீது ஏறி வெளியே குதித்து, காயத்துடன் உயிர் தப்பியுள்ளனர் எனவும் தெரிவித்தனர்.

    தீவிபத்துக்கான காரணம் இதுவரை என்னவென்று தெரியவில்லை. இந்நிலையில் சிறையில் கலவரம் ஏற்பட்டு அதனால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர்.

    ReplyDelete